25 ஜனவரி, 2012

Lord Shiva

பிரசவ நந்தி  

     விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் இருக்கிறது வில்லியனூர் இங்கு உள்ள கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பெரிய கோவில் என்று இங்கு உள்ளோரால் அழைக்கப்படுகிறது
11m  நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக்கோவிலில் பல்வேறு சிறப்பம்சங்கள் உண்டு அவற்றுள் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்கள் சிலிர்ப்போடு சொல்வது பிரசவ நந்தி கோகிலாம்பிகை சன்னதி எதிரில் உள்ள அசையும் சிறிய நந்தியே பிரசவ நந்தி என்று அழைக்கப்படுகிறது கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என வேண்டி இந்த நந்தியை திசை மாற்றி வைத்து வழிபடுகின்றனர் இதன் அருகே பிரசவம் குறித்த பழங்கால சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது
சுகப்பிரசவம் வேண்டி தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும் கர்ப்பிணி பெண்கள் வந்து இந்த நந்தியை வழிபட்டு செல்வது குறிப்பிடத்தக்கது .


பரமனின் பன்னிரண்டு நடனங்கள்

சிவனின் தாண்டவங்கள்  பலப்பல இருந்தாலும் பிரதானமானவை நூற்று எட்டு அவற்றுள்ளும் அதி முக்கியமானவை பன்னிரண்டு .
என்னனென்ன தாண்டவங்கள் அவை ? இதோ வரிசையாக பார்ப்போம்

ஆனந்த தாண்டவம்
வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி  ஆடுவது . இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி ஆடுவது மாறுகால் தாண்டவம் ஆகும் இறைவன் ஆனந்தமாக புரியும் ஏகாந்த நடனம் இது .

சிருங்கார தாண்டவம்
சிவனும் பார்வதியும் சேர்ந்து ஆடி நவரசங்களையும் காட்டுவது பரமனும் பார்வதியும் புரியும் நடன விளையாடல் .

திரிபுர தாண்டவம்
பூமியையும் ஆகாயத்தையும் அடக்கி ஆளும் நடனம் இந்த ஆடல் நின்றால் எல்லாம் அடங்கிவிடும் மூவுலகையும் இயக்கம் நர்த்தனம்

சந்தியா தாண்டவம்
தாள வாத்தியங்கள் முழங்கிட சந்தியா வேளையில் ஈசன் ஆடுவது

முனி தாண்டவம்
சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர் தாளம்போட ஈசன் ஆடிய தாண்டவம் முனிவர்களின் வேண்டுதலுக்காக அருட்காட்சி புரிந்து ஆடியது

உக்கிர தாண்டவம்
அசுரர்களை வதைத்தபோது ஆடிய தாண்டவம் .சினம் தெறிக்கும் சிவா நடனம் .

ஊர்த்துவ தாண்டவம்
காளியின் சினத்த அடக்குவதற்காக இடது காலை தலைக்கு மேலே தூக்கி ஒரே நேர்கோட்டில் அமைவதுபோல் ஆடிய நர்த்தனம் .

சம்ஹார தாண்டவம்
திருக்கடவூரில் மார்க்கண்டேயரை காப்பாற்ற சம்ஹார மூர்த்தியாக தோன்றி ஆடியது

பிரளய தாண்டவம்
ஊழிக்காலத்தில் உலக அழியும் பொது ஆடும் தாண்டவம்

பூத தாண்டவம்
சிவபெருமான் யானை தோல் போர்த்தி ஆயுதங்களை ஏந்தி உடலை முறுக்கி வளைத்து ஆடும் ஆட்டம் .

சதா தாண்டவம்
முனிவர்கள் யோகிகளின் வேண்டுகோளை ஏற்று சதா சர்வகாலமும் நிகழ்த்தும் தெய்வீக தாண்டவம்

புஜங்க தாண்டவம்
பாற்கடல் கடையப்பட்ட போது ஆலகாலத்தின் கொடுமையில் இருந்து தேவர்களை காப்பாற்ற அதை அருந்திவிட்டு ஆடிய தாண்டவம் .
புஜங்கம் என்றால் பாம்பு பாம்பணியும் பரமன் அந்த பாம்பைப்போலவே வளைந்து நெளிந்து ஆடியது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக